Designed by Iniyas LTD
காணாமல்போனோர் அலுவலகத்தில் தந்தையை மீட்டுதருமாறு கண்ணீருடன் சிறுமி கோரிக்கை…
காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (15) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அமர்வுக்கும் காணமல் போனோர் அலுவலகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இருப்பினும் குறித்த கலந்துரையாடலுக்கு வருகைதந்த காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடி கலந்துரையாடலில் வந்து உங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரியும் மக்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
இந்நிலையில் 9 மணிக்கு என அறிவிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் பத்து மணியளவில் மிகக் குறைந்தளவு உறவுகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
இந்த கலந்துரையாடலில் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்
இங்கு 1 2 பேர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் இங்கு தனது தந்தையை 1 வயதில் அருட்தந்தை ஒருவருடன் இராணுவத்திடம் கையளித்த சிறுமி தனது தந்தையை மீட்டு தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

