தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு…

காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  4 நாட்களின் பின்னர்  மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிழூர் – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ந.கோபால் என்பவரின் சடலமே  மகிழூர் பெரியகுளத்தில் இருந்து   மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வரவில்லை என  உறவினர்கள் அவரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையிலே அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபர் முதலைக் கடிக்கு உள்ளாகி அதனால் உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

Comments
Loading...