தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழப்பு..

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

56 வயதான சி.யோகராசா என்பவரே  இவ்வாறு  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுக்குத் இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்கள் சரியான தங்குமிடம், உணவின்னை, மன விரக்தி சோர்வு போன்றவற்றால் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் இணைப்பாளராக செயற்படும்  யோ.கலாரஞ்சினி என்பவரின் கணவர்  ஆவார்.

இதேவேளை கடந்த காலங்களில் காணாமல்ஆக்கப்பட்ட  தமது உறவுகளை தேடி வருவோரில் இதுவரை 17 உயிரிந்துள்ள நிலையில், சி.யோகராசா மரணம் கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...