Designed by Iniyas LTD
காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது
காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக காணாமல் போனோர் பணியகம் தெரிவித்துள்ளது.
இத் தகவலை காணாமல் போனோர் பணியக தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ், தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கம் என்றும், அதன்படி விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
>தற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்புநடவடிக்கைகள் ,இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை அடுத்து காணாமல் போனோரை தேடி அறியும் பிரிவும் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார்
அந்த வகையில் மன்னர் மாவட்ட செயலகத்தில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி முதலாவது மாவட்ட அமர்வு ஆரம்பிக்க உள்ளதாகவும், இதன்போது, காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற இடங்கள்
அதை தொடர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.