Designed by Iniyas LTD
காணாமல் போனோர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் – மஹிந்த சமரசிங்க ..
காணாமல் போனோர் பெயர் பட்டியலிலுள்ள பலர் வெளிநாடுகளில் மாற்றுப்பெயர்களில் உள்ளதாக கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தங்கள் பெயர், விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அதன் பின்னரே இலங்கையில் உண்மையாக காணாமல்போனோர் பட்டியலை தயாரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற கணிப்பு தவறானது என்றும் . இராணுவம் பொதுமக்களை இலக்கு வைத்து யுத்தத்தை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு யுத்த காலத்தில் சரணடைந்ததாக கூறப்படும் நபர்கள் காணாமல் போனதாக ஒட்டுமொத்தமாக கருதுவதும் தவறானது எனவும்,
ஏனெனில் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எத்தனை பேர் என்பதற்கான முழுமையாக அறிக்கை வெளிவிவகார அமைச்சிடம் இல்லை எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் இருந்து சென்றவர்கள் பலர் தமது பெயர்களை மாற்றிக்கொண்டு அந்தந்த நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் .எனினும் உண்மையான பெயர்கள் இங்கு காணாமல் போனோர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்காரணமாக முதலில் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும், அதன் பின்னரே இலங்கையில் காணாமல் போனோரின் உண்மையான பட்டியலை தயாரிக்க முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.