தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போன சிலர் வெளிநாடுகளிலாம்: ஸ்ரீலங்கா அரசாங்கம்

Sri Lanka UN

காணாமல் போன சிலர் வெளிநாடுகளில் இருக்கக் கூடுமென ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் காணாமல் போனதாக கூறப்படும் நபர்களில் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கக் கூடுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக கடமையாற்றியதாகவும் அப்போது காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல் திரட்ட வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சில வெளிநாட்டு அரசாங்கங்கள் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்ளை வழங்க விரும்பவில்லை எனவும் தகவல் வழங்குவதனை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தகவல்களை வழங்குவது தமது நாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தெரிவித்து, தகவல்களை வழங்குவதற்கு குறித்த நாடுகள் மறுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...