Designed by Iniyas LTD
காணாமல் போன பெண் சடலமாக மீட்பு?
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறைப் பகுதியில் பெண்ணொருவர் நீர்க்குழியிலிருந்து சடலமாக இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி, எருவில் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் சுலோக்ஸனா (வயது 17) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து தொழில் பயிற்சிநெறியை மேற்கொண்டுவந்த இந்தப் பெண் காணாமையைத் தொடர்ந்து, அவ்விடுதியிலுள்ள ஏனையோர் தேடியுள்ளனர். இதன்போது, இவரது சடலம் அருகிலுள்ள நீர்க்குழியில் கிடந்ததை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு தமக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.