தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணி தொடர்பான மக்கள் ஆணைக்குழுவினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்ற காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் மூலம் அமைக்கப்பட்ட காணி தொடர்பான மக்கள் ஆணைக்குழுவின் உடைய மக்கள் சந்திப்பு ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இலங்கை வரலாறு பூராகவும் சமூக பொருளாதார நிதி மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் பலவற்றுக்கு அடிப்படையாக காணி மற்றும் அவற்றின் பாவனை தொடர்பான சிக்கல்கள் அமைந்துள்ளன மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கை தரம் மற்றும் அவர்களின் எதிர்காலம் தொடர்பில் காணி மற்றும் காணி உரித்து தொடர்பான விடயங்கள் நேரடியாக பாதிப்பு செலுத்துவதனால் இலங்கையில் காணி தொடர்பான கொள்கைகள் தொடர்பில் அணுகும் போது மக்களை மையப்படுத்தி சமத்துவத்தின் அடிப்படையில் அதனை அணுக வேண்டும் அவ்வாறு நாட்டில் காணி தொடர்பான விடயங்களை ஆளும் அத்தகைய எந்த ஒரு கொள்கையும் இலங்கையில் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் உள்ள பல சிவில் அமைப்புக்கள் இணைந்து அமைக்கப்பட்ட காணி உரிமைகள் தொடர்பான மக்கள் கூட்டணியின் மூலம் காணி தொடர்பான மக்கள் ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது காணி மற்றும் அவற்றின் பாவனை தொடர்பில் மக்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் சேகரிப்பதே இந்த ஆணைக்குழுவின் வேலையாகும்.

இத்தகைய செயற்பாடுகளின் பிரதான நோக்கம் பொது மக்களின் காணி உரிமை மீறல்கள் தொடர்பிலும் சிக்கலான மற்றும் நிச்சயமற்ற கொள்கைகளின் விளைவாக சமூகம்  முகம்கொடுக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்வதும் திருத்தப்பட வேண்டிய அத்தியாவசியமான பகுதிகள் தொடர்பில் சிபார்சுகளை தயாரிப்பதும் ஆகும் இதன்மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஆபத்துக்களை சந்தித்துள்ள மக்கள் தோட்டப்புற மக்கள் பெண்கள் ஆதிவாசிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும்  நகரமயமாக்கல் பாரிய அளவிலான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள குழுக்கள் என அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வண்ணமாக அவற்றை உறுதி செய்யும் வகையிலான காணிக் கொள்கை தொடர்பில் வழிகாட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் ஆணைக்குழுவின் நிச்சயமற்ற அநியாயமான கொள்கைகளின் பாகங்களை இனங்கண்டு சட்டம் மற்றும் கொள்கைகளை சீர்திருத்த புதிய மொழி தயாரிப்பின் முன்மொழிவுகளை தயாரிப்பதன் பொருட்டு மக்கள் ,மக்கள் அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அரச நிறுவனங்கள் சிவில் அமைப்புக்கள் ஆய்வாளர்கள் அறிஞர்கள் சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தொடர்புடையவர்களை ஒன்றிணைப்பதற்கான மூல ஆரம்பமாக கருதலாம் இலங்கையின் புதிய காணிக் கொள்கை ஒன்றை வகுப்பதற்காக மக்களால் வழங்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் மக்களின் கருத்துக்கள் மற்றும் தகவல்களை ஒன்று சேர்ப்பதற்காக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து பொதுமக்களுக்கு செவி சாய்த்தல் இனக்குழு சார் கலந்துரையாடல்களை செய்தல் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது இந்த ஆணைக்குழுவின் உடைய மக்கள் கருத்தறியும் அமர்வு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய எஸ் எல் ஆர் சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்கள் குறித்த காணிகள் தொடர்பில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த ஆணைக்குழுவிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...