தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காதலியை தாக்கிய காதலன் சிறையில் அடைப்பு!

201503132303291993_2-people-including-parents-boyfriend-arrested-for_SECVPF.gifமது­பானம் அருந்­தி­விட்டு காத­லியைத் தாக்கி காய­மேற்­ப­டுத்­திய காத­லனை எதிர்­வரும் 19ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே உத்­த­ர­விட்­டுள்ளார்.

திரு­கோ­ண­மலை சுக­த­கம பகு­தியைச் சேர்ந்த கே.பி.தாரக்க கசுன் (வயது 26) என்­ப­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ராவார்.

சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

திரு­கோ­ண­மலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெண்­ணொ­ரு­வரை குறித்த சந்­தே­க­நபர் நீண்­ட­கா­ல­மாக காத­லித்து வந்­துள்ளார்.

இந் நிலையில் சாராயம் குடித்து விட்டு குறித்த பெண்ணின் வீட்­டுக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்ற அவர் குறித்த பெண்ணை தாக்­கி­யுள்ளார்.

இவ் விடயம் குறித்து மேற்­படி பெண் திரு­கோ­ண­மலை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை அடுத்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கடந்த புதன்­கி­ழமை இரவு கைது செய்து திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போதே விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Comments
Loading...