தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காதுக்குள்ளேயே தியேட்டர்! 3D ஹெட்செட்

3daudio02-25-1453720076சமீபத்தில் நடந்து முடிந்த தொழில்நுட்ப விழாக்களின் மூலம் இந்தாண்டு அதிகப்படியான விர்ச்சுவல் ரியால்டி எனப்படும் தோற்ற மெய்ம்மை தொழில்நுட்பங்களின் வரவு அதிகரிக்கும் என உறுதியாக நம்பப்படுகின்றது. கணினியில் உருவாக்கப்படும் தோற்றங்கள் மெய்யுருவாக காட்டப்படும் விர்ச்சுவல் ரியால்டி தொழில்நுட்பங்களை தொடர்ந்து மற்றும் ஓர் உன்னத தொழில்நுட்பம் மக்களை கவர காத்திருக்கின்றது.
கடந்த ஆண்டுகளில் 3டி ப்ரின்டிங் எனும் முப்பறிமாண அச்சாக்கம் அதிக பிரபலமானதை தொடர்ந்து இந்த ஆண்டு 3டி ஆடியோ பிரபலமாகும் என 3டி சவுண்டு லேப் மற்றும் ஜாப்ரா நிறுவனங்கள் கூறி வருகின்றன. தற்சமயம் இவை 3டி சவுண்டு வழங்கும் ஹெட்போன்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் 3டி சவுண்டு என்பது பல்வேறு சென்சார்களின் உதவியோடு மனித தலையின் பல்வேறு பகுதிகளில் ஒலியை வழங்குவதாகும். இதன் மூலம் மிகவும் துல்லியமான ஒலியை அனுபவிக்க முடியும். இந்த வகை ஒலியை இசை மட்டுமில்லாது, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3டி சவுண்டு லேப்ஸ் எனும் பிரென்ச் நிறுவனம் தனது முதல் 3டி ஆடியோ ஹெட்செட் கருவிகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன. 3டி சவுண்டு ஒன் என்ற பெயரில் இந்த ஹெட்செட்கள் $299  விற்பனை செய்யப்படுகின்றது. இந்த வகை ஹெட்செட் ஜிபிஎஸ், கைரோஸ்கோப், காம்பஸ், அக்செல்லோமீட்டர் உள்ளிட்ட பல்வேறு சென்சார்களின் உதவியோடு வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றது.

Comments
Loading...