Designed by Iniyas LTD
காயம் காரணமாக அவுஸ்திரேலிய தொடரில் இருந்து ஷமி விலகல்!
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. மொஹமட் ஷமிக்கு மாற்று வீரராக புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் அணியில் இணைந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பித்து 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட இருபது ஓவர் போட்டித் தொடர் ஆகியன நடைபெறவுள்ளது.
இத் தொடருக்கான அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் மொஹமட் ஷமிக்கு இடது காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இவரது காயம் குறித்து ஆலோசனை வழங்கிய மருத்துவர்கள் 4 முதல் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க அவுஸ்திரேலிய தொடரில் ஷமி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது