Designed by Iniyas LTD
காலநிலை மாற்றம் சீனாவில் கடுமையான பாதிப்பு
காலநிலை மாற்றம் சீனாவின் மீது ஏற்கனவே கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டதாகவும், இன்னமும் மோசமான பிரச்சினைகள் வரவுள்ளதாகவும் சீனாவின் காலநிலை அலுவலகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் வரட்சியும், கடுமையான மழையுடன் கூடிய காற்றும் மற்றும் அதிக வெப்பமும் ஏற்படும் என்று, சீன அதிகாரி ஒருவரிடம் இருந்து அபூர்வமாக வரக்கூடி ஒப்புதலான இதில், ஷெங் குவாங் அவர்கள் கூறியுள்ளார்.
ஒழுங்கற்ற ஆற்று ஓட்டமும், குறைவான தாவர விளைச்சலும் ஏற்படுவதுடன், ”திரி கோர்ஜஸ் அணை” போன்ற பாரிய கட்டுமானத்திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறைவான காபன் வெளியீட்டுக்கான எதிர்காலத்தை சீனா எதிர்காலத்தில் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2030உடன் தனது வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதாக சீனா உறுதி கூறியுள்ளது.