Designed by Iniyas LTD
காலி முகத்திடலில் துறைமுக நகரம் ஸ்தாபிக்கப்படவுள்ளது
காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று, கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சீன ஜனாதிபதி ஜி ஜின்பின் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று 17/09/2014 புதன் கிழமை காலை இதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
500 ஏக்கர் கடற்பரப்பில் இந்த துறைமுக நகரம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ஆயிரத்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாண பணிகளுக்காக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கவுள்ளது.
இன்று காலை முதல் கடலில் மணல் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீன பொறியியலாளர்கள், சீன தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு ஐந்து நட்சத்திர ஹேட்டேல்கள், வர்த்தக நிலையங்கள், தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இலங்கையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் இதுவே கூடுதலான நிதியில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
