தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கால் இறுதிக்கு முன்னேறிய சாய்னா

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், சீனதைபே வீராங்கனை தாய் டிசு யிங்கை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-17, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். saina

மற்றொரு ஆட்டத்தில் உலக போட்டியில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து 17-21, 21-13, 11-21 என்ற செட் கணக்கில் தன்னை விட தர வரிசையில் குறைவாக இருக்கும் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-19, 23-21 என்ற நேர்செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஸ்சை (டென்மார்க்) தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.

இதற்கிடையில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் உலக ஒற்றையர் தர வரிசையில் 6 இடங்கள் முன்னேறி முதல் முறையாக ‘டாப்-10’ இடத்துக்குள் முன்னேறி இருக்கிறார்.

சீன ஓபன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை சாய்னா பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய வீரர் காஷ்யாப் 17-வது இடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இரட்டையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளது.

Comments
Loading...