தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கால் முட்டியில் ரத்தம் வழிந்த வண்ணம் விளையாடிய ஷேன் வாட்சன்…

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், கால் முட்டியில் ரத்தம் வழிந்த வண்ணம் விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று சென்னை அணி கோப்பையைத் தவற விட்டது.

இருப்பினும் அந்தப் போட்டியில், சென்னை வீரர் ஷேன் வாட்சன் 80 ரன்கள் குவித்தார். கால் முட்டியில் ரத்தம் வழிந்த வண்ணம் அணிக்காக அவர் விளையாடியதாக சக வீரர் ஹர்பஜன் சிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போட்டி முடிந்ததும், வாட்சனின் கால் மூட்டுப் பகுதியில் 6 தையல் போடப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...