Designed by Iniyas LTD
காவிரி உரிமையை மீட்க வலியுறுத்தி மனித சங்கிலிப் போராட்டம்: தமிழக விவசாயிகள்
காவிரி உரிமையை மீட்க வலியுறுத்தி அடுத்த மாதம் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் முன் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அடுத்த மாதம் 14 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, நாடாளுமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்தனர். விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி ஆனந்தன் முடித்து வைத்தார்.