Designed by Iniyas LTD
காஷ்மீர் புட்காம் மோதலில் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் போரட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதலில் 3 இளைஞர்கள் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9 முதல் கொந்தளிக்கும் காஷ்மீரில் கலவர பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59 பேர் பொதுமக்கள், 2 பேர் பாதுகாப்புப் படையினர். காஷ்மீரில் கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து காஷ்மீரில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புட்காம் மாவட்டம் மகம் பகுதியில் போராட்டம் வெடித்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அரிபதான் பகுதியில் நின்றிருந்த சிஆர்பிஎப் வாகனம் மீது இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 இளைஞர்கள் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூலை 9 முதல் நடைபெற்றுவரும் போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
39-வது நாளாக ஊரடங்கு:
காஷ்மீரில் 39-வது நாளாக இன்றும் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. குறிப்பாக ஸ்ரீநகர் மாவட்டம், அனந்தநாக் பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவே ஊழியர்கள் வருகை இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலத்தில் சில பகுதி