Designed by Iniyas LTD
காஷ்மீர் மக்களுக்கு நீதிவேண்டி மக்கள் ஆர்ப்பாட்டம்!
காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், அவற்றை உடன் நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஜும்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள், பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக மதுரங்குளி நகரை அடைந்தனர்.
