தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிணற்றில் தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி!

child-deth-still006-300x200திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்ட­கலை கிறிஸ்­லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்­பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து 43 வயதான ஆண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இவர்  சம்­பவ தினம் காலை தோட்ட வேலைக்கு, சென்று பகல் வரை வீட்­டுக்கு வராமல் இருந்­ததால் பகல் உண­வுக்­காக இவரை தேடிச் சென்­ற­போது கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை கண்­டுள்­ளனர்.

அத­னைத்­தொ­டர்ந்து பிர­தே­வா­சி­களால் அவரை மீட்­டெ­டுத்த போதிலும் அவர் உயிரிழந்­தி­ருந்­த­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தனர்.  இது தொடர்­பாக மேல­திக விசாரணை­களை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...