Designed by Iniyas LTD
கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் வரை நாட்டில் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது
வடகொரியா அதிபர் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது. இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
கிம் ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சி மே 6 ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது. ஆனால் சரியான தேதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில் கிம் ஜாங், தனதுநாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், பதவிப் பிரமாணம் பாதுகாப்புகருதி, நான் பதவியேற்கும் வரைநாட்டில் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது. அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கூட இறுதிச்சடங்கினை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
அதிபரின் இந்த உத்தரவினை கேட்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், வடகொரியா ஒரு அணு ஆயுத தேசிய நாடு என அறிவித்துள்ளது.