Designed by Iniyas LTD
கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்! : சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள்
கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்! : சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்! : சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்! : சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள்
புதுக்கோட்டை நகருக்கே தாகம் தணித்த புதுக்குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்டு கிடந்ததை, சகாயம் ஐ.ஏ.எஸ்-சின் ஆலோசனையில் செயல்படும் மக்கள் பாதை அமைப்பினர் கடந்த வாரம் சுத்தம் செய்தனர். அதைப் பார்க்க வந்த சகாயம் ஐ.ஏ.எஸ். குளம் சுத்தம் செய்யும் போது யாராவது இடையூறாக வந்து பேசினார்களா? அதிகாரிகள் வேலை செய்யக் கூடாது என்ற தடுத்தார்களா? என்று கேட்டறிந்தார்.
புதுக்குளத்தை தூய்மை செய்தது போல, தொடர்ந்து அனைத்துக் குளங்களையும் இளைஞர்களே சுத்தம் செய்து வரத்து வாரிகளையும் ஆக்கிரமிப்புகளையும் தூய்மை செய்தால் தண்ணீர் பிரச்சனையில் இருந்து மீள முடியும். எனவே, தன்னார்வத்தோடு அனைவரும் களமிறங்க வெண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, தனியார் இயற்கை உணவகத்தில் யோகா பயிற்சி, மரச்செக் ஆகியவற்றைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
“மணல் குவாரிகளை அரசுடமையாக்கியது வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகளை டாமின் எனும் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து அரசே நடத்த வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். இந்த தேசம் கிராமங்களின் தேசம், விவசாயிகளின் தேசம். விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. இங்கு, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, விவசாயிகள் மரணித்துக்கொள்வது என்பதெல்லாம் ஒரு தேசம், ஒரு சமூகம் சந்திக்கும் அபாயத்தின் அறிகுறி.
எனவே, அதை சாதாரணமாக புறந்தள்ளிவிட்டு செல்ல முடியாது. நிச்சயமாக, விவசாயிகளின் மேம்பாட்டிற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். நானும் ஒரு அரசு ஊழியர் என்பதால் அரசின் செயல்பாடு மற்றும் கொள்கை முடிவுகளை விமர்சிக்க முடியாது! லட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இளைஞர்கள் பொதுத்தொண்டுகள் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
– இரா.பகத்சிங்