Designed by Iniyas LTD
கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்புக்கள்..
திருமாலுடைய பல அவதாரங்களில் அனைவரையும் கவர்ந்த ஒரு அவதாரம் என்றால் அது ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்தான். கம்சனை அழிக்கவும் மகாபாரத போரை தலைமையேற்று நடத்தி பூமியில் அதர்மத்தை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணர் என்னும் அவதாரமாகும்.
கிருஷ்ணர் பூமியில் ஜனித்த தினத்தை கிருஷ்ணா ஜெயந்தி என நாம் கொண்டாடுகின்றோம்.
பகவான் கிருஷ்ணர் புயல், மழை சூழ்ந்த இருட்டு நேரத்தில் சிறைச்சாலையில் வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாய் பிறந்தார். பின்னர் அவரின் மாமா கம்சனுக்கு பயந்து பிருந்தாவனத்தில் இருந்த தனநந்தர் மற்றும் யசோதையின் மகனாக வளர்க்கப்பட்டார்.
கிருஷ்ணர் பிறந்த இந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.
இது கொண்டாடப்படும் இடத்தை பொறுத்து கோகுலாஷ்டமி, அஷ்டமி ரோகினி, கிருஷ்ணா ஜென்மசாந்தி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
திருமால் காக்கும் கடவுளாவார். அவரின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரும் நமக்கு பல நன்மைகளை வழங்க கூடியவர்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு செய்வது உங்களுக்கு சகல செல்வங்களையும் வழங்கக்கூடும். கடன் தொல்லை, செழிப்பு, குழந்தை வரம் என அனைத்தும் கிடைக்க கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு மிகவும் அவசியமானது.
கிருஷ்ண ஜெயந்தி மந்திரம் மந்திரம்
” ஓம் ஹிரும் ஸ்ரீம ஸ்ரீ ஃபேட் ” என்னும் மந்திரத்தை முழு மனதுடன் கூறி பூஜையை தொடங்குங்கள். பூஜையில் வைக்கப்பட்ட நாணயங்களை பூஜை முடிந்தவுடன் உங்கள் வாகனம், பணபெட்டி மற்றும் எங்கெல்லாம் நீங்கள் செல்வம் நிறைய வேண்டுமென விரும்புகிறீர்களா அங்கெல்லாம் வைத்து விடுங்கள். ஒரு நாணயம் மட்டும் பூஜையறையிலேயே இருக்க வேண்டும்.

