Designed by Iniyas LTD
கிளிநொச்சி, கனகாம்பிகை குளப்பகுதியில் அகழ்வுப்பணிகள்..
கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்துக்கு அண்மித்த பிரதேசத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே அகழ்வுப் பணிகள் நடை பெற்றன.
குறித்த அழவுப்பணி கிளிநொச்சி நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக வன்னி நிலப்பரப்பில் பல இடங்களில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறி பொலிஸாரும், இராணுவத்தினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.