Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் இனந்தெரியாதோரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்…
கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் கையால எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இந்த சுவரொட்டிகள் அடையாளம் தெரியாதவர்களால் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி நகர் பகுதிகளில் மட்டுமல்லாது, விஸ்வமடு, வட்டக்கச்சி போன்ற பல இடங்களிலும் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சுவரொட்டிகளில் நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துரோகிகள் என்றும், பாதாள மற்றும் வன்முறைக் காரருக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் , சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள், சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.



