Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடைவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்!
கிளிநொச்சி, பளை- கச்சார்வெளி பகுதியில் நடமாடும் பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வேளையில் சேவையில் ஈடுபட்டிருந்த நடமாடும் பொலிஸாரின் வாகனத்தை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒரு வேட்டு மாத்திரமே பொலிஸ் வாகனத்தைத் தாக்கியுள்ளது. தாக்குதலில் வாகனம் சிறியளவில் சேதமடைந்த போதிலும் அதனால் அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.