தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் தமிழ் சிறுவனை கடுமையாக தாக்கிய ஸ்ரீ சிறைக்காவலர்கள்!

கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து இன்று மாலை சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரடிப்போக்கு சந்தியில் இன்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறால் ஏற்பட்டதாக தெரிவித்து, சிறு காயங்களுடன் உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மனிதாபிமானம் இன்றிய சிறைக்காவலர்களின் செயற்பாடு அனைவரது மனங்களையும் காயப்படுத்தி விட்டதாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் கவலை வெளியிட்டனர்.

Comments
Loading...