தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் நீர் இன்றி வாடும் கால்நடைகள் …

கிளிநொச்சி  தருமபுரம், புளியம்பொக்கணை, கல்லாறு போன்ற பகுதிகளில் கால்நடைகள் நீர் தேடி அலையும் அவலநிலை காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் கடுமையான வறட்சி காரணமாக  குறித்த பகுதிகளில் காணப்படும் நீர்நிலைகள் வற்றி காணப்படுவதனால், கால்நடைகளுக்கான குடிநீர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கடந்த காலங்களில் இவ்வாறு வறட்சி நிலவும் பகுதிகளில் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் கல்மடு குளத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கல்மடுக்குளத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளமையால் குறித்த பகுதிக்கான நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...