Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் பாடசாலை நிர்மாணிக்க ஜப்பான் 86,358 அமெரிக்க டொலர் நிதியுதவி
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக மீள்குடியமர்த்தப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்கு நன்கொடையாக ஜப்பான் அரசாங்கம் 86,358 அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது.
ஜப்பான் அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கான நிதியுதவியின் ஊடாக வழங்கப்படும் இந்த நன்கொடைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இவ்வொப்பந்தமானது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் மனிதநேய அபிவிருத்தி நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் ஜேசுராஜா அமிர்தராஜ் ஆகியோருக்கிடையே கைச்சாத்திடப்பட்டது.