தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் மாணவன் தாக்கப்பட்டதிற்கும், கஞ்சாதொடர்பாக தகவல் வழங்கியமைக்கும் எவ்வித தொடர்புமில்லை – பொலிஸ்மா அதிபர்..

கிளிநொச்சியில் மாணவன்  தாக்கப்பட்டதிற்கும், கஞ்சா  தொடர்பாக தகவல் வழங்கியமைக்கும் எவ்வித தொடர்புமில்லை என  பொலிஸ்மா  அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார்.

குறித்த சிறுவன், துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோது  உந்துருளியில்  சென்றவர்கள் சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது உந்துருளியை  திருப்பியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட விபத்திலேயே சிறுவன் காயமடைந்ததாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

. மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமையால் சிறுவன் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கஞ்சா கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்கள்  இரகசியமான முறையிலேயே பேணப்படுவதாகவும்   அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவன் கஞ்சா தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,   இதனைக் கண்டித்து இன்று  கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...