தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை படைமுகாமிற்கு வருமாறு அழைப்பு.

formerltte.150A

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளை அனைவரையும் கிளிநொச்சி பிரதான படை முகாம் பகுதிக்கு வருமாறு படையினர் அவசர அறிவித்தல் ஒன்றை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் புனர்வாழ்வு பெறாதா நிலையில் உள்ள  கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள் போராளிகளையும் கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள படை முகாமுக்கு வருமாறு படைகள்அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் சிலர் வேலை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிப் பிரதேசங்களுக்கு சென்றிந்த நிலையிலும் கூட அச்சம் காரணமாக உடனடியாக கிளிநொச்சி செல்வதாக அறிய முடிகிறது.

இவ் அறித்தல் ஏன் விடப்பட்டது? என்ன நடக்கப் போகிறது என்பது தொடர்பில் தெரியவராத நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் முன்னாள் போராளிள் மத்தியிலும் அச்சவுணர்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியான தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்று வரும் நிலையில் இவர்வாறு தங்களை அழைப்பது குறித்து அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Comments
Loading...