Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் வெள்ள நீர் வழிந்தோடும் பகுதியில் பெருமளவு வெடி பொருட்கள்…
கிளிநொச்சி – கண்ணகி நகர் பகுதியில் வெள்ள நீர் வழிந்தோடும் பகுதியில் பெருமளவு வெடி பொருட்களை சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மழைகாலத்தில் வெள்ள நீர் வழிந்தோடும் ஆற்றுப்பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பதை மக்கள் அவதானித்துள்ளனர்.
இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் வெடி பொருட்களை அகற்றியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

