Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் 25வது நாளாக தொடரும் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டம்!
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 25ஆவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து வருகிறது.
இதன்போது தமது ஆதங்கத்தை பகிர்ந்துக் கொண்ட உறவுகள், “உண்மையாக மன்னிப்பு வழங்கப்பட போகின்றனர் என நம்பி எமது பிள்ளைகள் சரணடைந்தனர்.
ஆனால், அவ்வாறு சரணடைந்தவர்களின் நிலை இதுவரை மர்மமாகவே உள்ளது. எமது தமிழ் பிரதிநிதிகள் நினைத்தால் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் பெயர் பட்டியலையேனும் உடனடியாக வெளியிடலாம்.
இந்த நல்லாட்சி அரசு ஆட்சி பீடம் ஏறும்போது நூறு நாள் வேலைத்திட்டத்தில் எமது பிரச்சினைகளே முதலில் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் நூறு நாட்கள் அல்ல, நூறு ஆண்டுகள் கடந்தாலும் எமது பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் நல்லாட்சிக்கு வாக்களித்த எமக்கு கண்ணீர் மாத்திரமே எஞ்சியுள்ளது” என்றும் தெரிவித்தனர்.