தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் விபத்து – முதியவர் படுகாயம்…

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற   விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று மாலை 4.45 மணியளவில் முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர் உடனடியாகவே நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

விபத்து தொடர்பான  மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.

Comments
Loading...