Designed by Iniyas LTD
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி விசேடஅதிரடிபடையினரால் பளைப்பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவரையும் அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு கோடி ரூபாய்
அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
