Designed by Iniyas LTD
கிளிநொச்சி வீதிகளில் தென்பட்ட புலிச் சின்னம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிகப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கிளிநொச்சி, அக்கராயன்குளம் மற்றும் ஸ்கந்தபுரத்தில் முதன்மை வீதிகளில் விடுதலைப் புலிகளின் இலட்சினை, தமிழீழ வரைபடம் உள்ளிட்டவை பாதைகளில் வரைந்தும் வேறு வழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சில இடங்களில் கரும்புலிகள் தினம் தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் அக்காராயன்குளம் பொலிஸாரும் பிராந்திய பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரும் உளவுத் துறையினரின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நேற்றையதினம் கரும்புலிகள் தினம் அனுக்ஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
