Designed by Iniyas LTD
கிளியில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் அகவணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல்துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தின் 11ஆம் நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி தலைவர் சுப்ரமணியம் சுரேந்திரன் தலைமையில், கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு, யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து திலீபனின் நினைவுதினத்தையொட்டி இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுவாரத்தின் இறுதிநாள் நிகழ்வான நாளை, வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் விசேட அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.