Designed by Iniyas LTD
கிளியில் இராணுவ ஆட்சியே நிலவுகிறது!
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது. எங்கும், எதிலும் இராணுவத்தின் தலையீடு தான் உள்ளது. நல்லாட்சி நிலவுவதாகவும் ஜனநாயக ஆட்சி நிலவுவதாகவும் குறிப்பிடுகின்றனர் ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு இணைத்தலைமை தாங்கி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு உள்ளது, முன்பள்ளிகளை இராணுவத்தினர் நடத்துகின்றனர், விவசாயம் செய்கின்றனர், வியாபாரம் செய்கின்றனர், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர், எம் மக்களுக்குரிய வயல் நிலங்களை அபகரித்து அவர்களின் நிலங்களை அவர்களுக்கே குத்தகைக்கு கொடுத்து பணத்தை எடுக்கின்றனர். பாடசாலைகளின் அருகில் இராணுவ முகாம்கள் உள்ளன. இவ்வாறு எல்லா விடயங்களிலும் இராணுவத்தின் தலையீடு அதிகரித்துக் காணப்படுகிறது. எனவேதான் இந்த மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்திற்கு பதிலாக இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என்றார்.