தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளியில் இருபதாயிரம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில்?

kiliகிளிநொச்சியில் இருபதாயிரம் இளைஞர் ,யுவதிகள் வேலைவாய்ப்பு அற்ற நிலையில் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மனிதவலு மற்றும் வேலைவாயப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று கொடுக்க வேண்டும்.

இதன் மூலம், அவர்களது குடும்ப வருமானத்திற்கு உதவ வேண்டும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாத நிலையில் அவர்கள் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்று கொள்ள முடியாதுள்ளனர்.

கிளிநொச்சியில் இரண்டு, மூன்று தொழிற்சாலைகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாயிரம் இளைஞர் யுவதிகள் வேலை செய்து வருகிறார்கள்.

மேலும் கிளிநொச்சியில் நிர்மாணிக்கவிருக்கும், தொழிற்சாலையில் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...