Designed by Iniyas LTD
கிளியில் தமிழ் பெண்ணை கொல்ல முயன்ற இராணுவச்சிப்பாய்?
கிளிநொச்சி பகுதியினில் தமிழ்பெண் ஒருவரை கொலை செய்ய இலங்கை இராணுவத்தை சேர்ந்த சிப்பாயொருவர் மேற்கொண்ட முயற்சி பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை கிளிநொச்சி சாந்தபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த குறித்த 56 வயதுடைய தமிழ் பெண் ஒருவரை அந்தப்பகுதியில் நின்றிருந்த சிறிலங்கா இராணுவச்சிப்பாய் ஒருவர் கொலை செய்ய முற்பட்டுள்ளார்.தன்வசமிருந்த கூரிய இராணுவப்பயன்பாட்டிலுள்ள கத்தியால் தாக்கி கொலை செய்யமுற்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்கி கொலை செய்ய முயற்சித்தவேளை குறித்த பெண் கூச்சலிட்டதைத்தொடர்ந்து அருகினில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த பெண்ணின் மகன் ஓடிச்சென்றிருக்கின்றார்.இதனையடுத்து குறித்த இராணுவச்சிப்பாய் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் ஓடி தப்பித்துள்ளார்.
கழுத்துப்பகுதியினில் படுகாயமடைந்த கேதீஸ்வரன் மாரியம்மா( 56 வயது) தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அவசர சிகிற்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிப்பாயினை தங்களிற்கு தெரிந்திருக்கவில்லையென கூறும் பெண்ணின் மகன் கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லையென தெரிவித்துள்ளார்.