தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளியில் விடுதலைப்புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு?

கிளிநொச்சி – வட்டக்கச்சி, புழுதியாறு குளத்தில் நேற்று இரவு  ஒருதொகை வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி – வட்டகச்சி, புழுதியாறு குளத்தில், விமான நிலைய தாக்குதலுக்கு ஒத்திகை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன், விமான ஓடுபாதைகள் உள்ள இடத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 60 மி.மீ 10 மோட்டார் செல்கள், 81 மி.மீ 01 மோட்டார் செல் போன்ற வெடிபொருடகள்  மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், இரணைமடு விமான படையினரால் இராமநாதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஸ்ரீலங்கா  அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...