தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளி-உருத்திரபுர காந்தி இல்லத்தில் மூன்று சிறுவர்களை காணவில்லை?

Missing_promo_Titlecard-300x169கிளிநொச்சி – உருத்திரபுரம்  காந்தி சிறுவர் இல்லத்தில்  தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் கடந்த  17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக  காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி  பொலிஸ்நிலையத்தில்   முறைப்பாடு செய்துள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர்கள்  14 மற்றும்  13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் தமக்கு கல்வி  கற்க விருப்பம் இல்லை எனவும், கல்வி கற்குமாறு தம்மை கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும்  காந்தி சிறுவர் இல்லத்தினரிடம்  தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கல்வி கற்க விருப்பம் இன்றி சிறுவர் இல்லத்தில்   இருந்து வெளியேறியிருக்கலாம் என   பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...