Designed by Iniyas LTD
கிளி-திருவையாற்றில் முன்னாள் போராளி மர்ம நபர்களால் கடத்தல்?
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராளியான இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்தவர்கள் மூவர் தம்மை வவுனியா பொலிஸார் என அடையாளப்படுத்திய மர்ம நபர்கள், குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியில் வசிக்கும் 32 வயதான முருகையா தவவேந்தன் என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சீரூடை அணிந்த இருவரும் சாதாரண உடை அணிந்த ஒருவரும் குறித்த வாகனத்தில் வருகைதந்ததாகவும் அவர்கள் தம்மை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தூசித்ததாகவும் குறித்த இளைஞரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிமாவட்ட பொலிஸார், மற்றுமொரு மாவட்ட எல்லைக்குள் வருகைதந்து ஒருவரை கைதுசெய்யும் போது அந்த மாவட்டத்தின் பொலிஸாரின் உதவியுடனேயே அதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைதுசெய்யும் போது வழங்கப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதிக் கட்டப் போரின் போது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஒமந்தையில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வவுனியா நெளுக்குளம் தடுப்பு முகாமில் இருந்து, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆம் திகதி குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டிருந்தார்.