Designed by Iniyas LTD
கிளி பரவிப்பாஞ்சான் மக்களின் நில மீட்பு போராட்டம் 7வது நாளாக தொடர்கிறது!
இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும், கிளிநொச்சி பரவிபாஞ்சான் கிராம மக்களுக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை.
பரவிபாஞ்சான் மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம், ஏழாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கப்படும் வாக்குறுதிகள் தொடர்ந்தும் பொய்யாகிபோவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.