தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளி பூநகரியில் வீதி விபத்து! ஒருவர் பலி 16 பேர் படுகாயம்

2கிளிநொச்சி பூநகரி மன்னார் பிரதான வீதியில் நேற்று திங்கள் கிழமை இடம்பெற்ற மினிவான் விபத்தில் ஒருவர் இறந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திங்கள் மடு கோவிலில் இருந்து  மன்னார் வீதியின் ஊடாக யாழ் மானிப்பாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பூநகரி மண்டக்கல்லாறுக்கு அண்மித்த பகுதியில் பிற்பகல் ஒன்று நாற்பந்தைந்து மணியளவில் மினிபஸ் தலைகீழாய் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது

சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை உடனயாக கிளிநொச்சி அவசர கால அம்புலன்ஸ் சேவை மூலம் பூநகரி வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ் போதான வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்

குறித்த மினிவான் தலைகீழாய் பாலம் ஒன்றின் மீது தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது மேலதிக விசாரணைகளை நாச்சிக்குடா ஸ்ரீ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...