Designed by Iniyas LTD
கிளி-முல்லை மாவட்டங்களில் பொருத்துவீடுகள் அமைக்க நடவடிக்கை?
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இரு பொருத்து வீடுகளின் மாதிரி வீடுகளை உடனடியாக அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள 16 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடுகளில் இரு வீடுகளை மக்களின் பார்வைக்காக கட்டுவதற்காக மீள்குடியேற்ற அமைச்சு ஏற்பாடு செய்து அதற்கான இடங்களையும் தேர்வு செய்துள்ளனர்.
இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தினில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் ஓர் மாதிரி வீடும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் ஆனந்தபுரம் கிராமத்தினில் ஓர் மாதிரிவீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் நாளை மறுதினம் திங்கட் கிழமை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரு வீடுகளும் அமைக்கத் திட்டமிட்ட இரு பிரதேசங்களின் இடங்களையும் மீள் குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் கடந்தவாரம் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர.
குறித்த பொருத்து வீட்டின் இரு மாதிரிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் உரும்பிராய் மற்றும் தெல்லிப்பழைப. பிரதேசங்களில் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு இது தொடர்பான பலத்த சர்ச்சை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.