Designed by Iniyas LTD
கிழக்கிலிருந்து ஸ்ரீ இராணுவம் அகற்றப்படமாட்டாது? ஸ்ரீ பாதுகாப்பு அமைச்சு
கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 64 சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று நிராகரித்துள்ளது.
கிழக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சிறிலங்காப் படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.