Designed by Iniyas LTD
கிழக்கில் தமிழ்ப் பாடசாலைகள் திட்டமிட்டு புறக்கணிப்பு.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் திட்ட மிட்டுப் புறக்கணிக்கப்படுவதோடு, அங்கு கடமையாற்றுகின்ற அதிபர், ஆசிரியர்களும் பழிவாங்கப்படுகின்றனர். அங்கு அடக்கு முறை நிர்வாகமே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் தமிழர் ஆசிரியர்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் கடமையாற்றிய தமிழ் உயர் அதிகாரிகளை திட்டமிட்டு வெளியேற்றி பெரும் பான்மை இனம் சார்ந்த அதிகாரிகளே தற்போது முற்று முழுதாகக் கடமையாற்றுகின்றார்கள். அதனால் அதிகளவான தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன,தமிழ் பாடசாலைகளும் புறக்கணிக்கப்படுகின்றன.
அடக்குமுறைப் பாணியில் அதிபர்களும் ஆசிரியர்களும் துன்புறுத்தப்படுகின்றனர். பாடசாலைகளில் அதிபர்கள் நியமனம், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமனம், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களின் நியமனம் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்ட பழி வாங்கல்களும் புறக்கணிப்புகளும் இடம் பெற்றுள்ளமை ஆதாரங்களு டன் நிரூபணமாகியிருக்கின்றன.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் அடக்கு முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, மீண்டும் இனக்குரோ தங்களைத் தூண்டுகின்ற செயற்பாடுகளாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் பேசும் உயர் அதிகாரிகளின் பொறுப்புகளைப் பறித் தெடுத்துஇ தமிழ் பாடசாலைகளுக்கு எதுவுமே செய்யவிடாமல் தடுத்து, அரசியல் ரீதியிலான செல்வாக்குகளை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரயோகிப்பது அவரது பதவிக்குரிய அதிகாரம் உடையதல்ல.
பொருத்தமில்லாத ஏராளமான படிவங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமைகளைக் கூட்டி மாகாணக் கல்வித் திணைக்களம் செய்ய வேண்டிய வேலைகளை பாட சாலைகள் மீது சுமத்துவது பொருத்தமில்லாத செயற்பாடு. இடமாற்றச் சபை கூடித் தீர்மானித்த அதிபர்கள், ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இடைநிறுத்தியிருப்பது அடக்கு முறையின் இன்னுமொரு வெளிப்பாடு.
பெரும்பான்மையான தமிழ்ப் பாடசாலைகளைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதொரு அடக்கு முறையைப் பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்பதனை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழர் ஆசிரியர்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.