தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு பல்கலைக்கழகம் இரு தினங்கள் மூடப்படுகிறது!

article_1452084210-eastern_university_02_60544_435சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இரு தினங்கள் இடைநிறுத்தப்டுவதாகப் பதில் பதிவாளர் அ.பகிரதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழையால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக விடுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  வியாழக்கிழமையும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த சீரற்ற காலநிலை தொடரும் பட்சத்தில தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது தொடர்பாக மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments
Loading...