தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு பல்கலையில் ஸ்ரீ இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போன 158 பேரின் நினைவு நாள் இன்று!

oil_lamp_CIகிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போன 158 பேரின் நினைவு தின நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. இந்நிலையில், இதனை அனுஷ்டிப்பதற்கு கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், கடந்த நினைவு தினத்தை கூட வீதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் விளக்கு வைத்தே அனுஷ்டித்ததாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு அமைவாக இம்முறையாவது கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும்.
அத்துடன், அதற்கான நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கும் இடம் ஒதுக்கித்தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், கடந்த 31ஆம் திகதி வரையிலும் அவ்வாறான எந்த ஒரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார்.
இறுதி நேரத்தில் கோரிக்கைகளை முன்வைப்பதனால் அனுமதியை பெறுவது கடினமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், காணாமல் போன தங்களது உறவுகளை நினைவு கூறுவதற்கு நல்லாட்சி அரசாங்கமும், கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகமும், அவர்களுக்கான இடத்தை ஒதுக்கித்தர வேண்டு என்பதே அனைவரினது வேண்டுகோளாகவுள்ளது.

Comments
Loading...