தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழ-முதலமைச்சர் கடற்படை முகாம்களுக்குள் செல்ல தடை!

hafiz-nazeer-350-newsகிழக்கு மாகாண முதலமச்சர் நசீர் அஹமட் கடற்படை முகாம்களுக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வின் போது கடற்படை கப்டன் ஒருவரை மிக மோசமாக திட்டிய காரணத்தினால், முதலமைச்சர் அஹமட் இலங்கையின் கடற்படை முகாம்களுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன சிங்கள ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

இந்த விடயம் குறித்து நேற்று அனைத்து கடற்படை முகாம்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் கடற்படை முகாமின் கட்டளைத் தளபதி கப்டன் ஐ.ஆர். பிரேமரட்னவை மிகவும் இழிவாக திட்டியமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கடற்படையினர் தயாரித்த அறிக்கை நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

கடற்படையினரால் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டதுடன், கணனிப் பிரிவு ஒன்றையும் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கணனிப் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வின் போது அழைப்பு விடுக்காமல் வருகை தந்த முதலமைச்சர் பகிரங்கமாக கடற்படை அதிகாரிகளை இழிவாக பேசினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...